(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் வகையில் கட்சியின் உயர்பீடம் அவசரமாக தற்போது கூடுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது.
மக்கள் காங்கிரஸிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக மூவரின் பெயர்கள் கட்சிக்கு உள்ளேயே பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் ஒருவரின் பெயர் கட்சியினால் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.