சொகுசு வாகனம் ஒன்று தொடர்பில்
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனு குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரினார்.
இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணையை டிசம்பர் 9ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.