ரவி கருணாநாயக்கவின் பெயர்
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்வாங்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் வேறு ஒரு கட்சியின் செயலாளர் ஊடாக இந்த தன்னிச்சையான வேலையை ரவி கருநாயக்க செய்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம் கட்சியின் அரசியலமைப்பை மீறியமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.