முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு
சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு கார் கொட்டாவ - லியங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த வாகனம் அந்தப் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கார் கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சாரதியினால் கராஜுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட போது பதிவு இலக்கத் தகடுகள் எதுவும் இல்லை எனவும் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.