UL607 என்ற இலக்கம் கொண்ட

விமானத்தில் இடம்பெற்றசம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL607 இலக்க விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை கெப்டனை  சேவையில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னுரிமையாகும்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி மற்றும் துணை விமானிக்கு இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையின் அடிப்படையில் இது தொடர்பான அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

விமானிகளுக்கு இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும், மற்ற குழுவினர் நிலைமையைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொள்ள நேரிட்டதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் இயக்கத்தில் இருக்கும்போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள்ளார், இந்த நேரத்தில் விமானத்தின் மற்றொரு உறுப்பினர், விமானத்தில் விமானியுடன் செல்ல விமானி அறைக்குள் நுழைய வேண்டியிருந்தது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மற்றுமொரு உறுப்பினர் உள்ளே நுழைவதற்குள் விமானி அறையின் கதவு மூடப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

ஆனால்  கெப்டன் மீண்டும் கதவை திறக்க மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. விசாரணை அறிக்கை வரும் வரை கேப்டன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி