களுத்துறையில் இருந்து
மருதானைக்கு செல்லவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இவ்வாறு தீ பிடித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்கவிருந்த ரயிலின் இயத்திரமே தீப் பிடித்துக் கொண்டது.
