தங்காலை பிரதேச சபையின்

முன்னாள் உப தலைவர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப்பை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
 
சந்தேகநபர் பயன்படுத்திய ஜீப், வீரசிங்க மாவத்தை, பெலியஅத்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அண்மையில் கைப்பற்றப்பட்டது.
 
குறித்த ஜீப் தங்கல்ல பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பயன்படுத்திய வாகனம் என்பதும் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த ஜீப்பின் இலக்கம் போலியானது எனவும், இந்த இலக்கம் கொண்ட வாகனம் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது எனவும் தெரிய வந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி