(அபு அலா) 

தேர்தலில் இருந்து விலகி முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக 

பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் வெற்றி வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

அதனால், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரின் ஆதரவை வழங்குமாறு கூறியிருந்தேனே தவிர, தேர்தலிலிருந்து விலகி

விட்டுக் கொடுப்பதாகவோ அல்லது முஷாரப்போடு இணைந்து பயனிப்பதாகவோ ஒருபோதும் நான் கூறவில்லை.

இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளன என்பதைப் பற்றி அவருக்கு மிகத் தெளிவாக தெளிபடுத்தியுள்ளேன்.

அது மாத்திரமல்லாது கட்சித் தலைமையினால் எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினேன். 

இம்முறை நாடாளுமன்றம் செல்வதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளன. அதற்கான ஆதரவுகளை முழுமையாக வழங்குவதற்கு பொத்துவில் மக்கள் தொகுதி மக்களும் முன்னின்று செயற்படுகின்றனர்.

இதை சகித்துக்கொள்ள முடியாத சிலரினால் இவ்வாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை எவரும் நம்ப வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி