கம்பஹா படல்கம பிரதேசத்திலுள்ள
தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக வெப்பம் கொண்ட கொதிகலன் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.