வளிமண்டலத்தில் நிலவி வந்த
குழப்ப நிலை படிப்படியாக நீங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் காலை வேளையில் காணப்படும் மழை நிலைமை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடரலாம் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.