இரத்மலானை பெலக்கடை

சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவரைக் கொல்லச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து வெவ்வேறு அளவுகளில் ஏழு வாள்களும் 37,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஒருவரை வெட்டிக் கொலை செய்வதற்காக காரில் சிலர் வருவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய  பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உடனடியாகச் செயற்பட்டு இந்தக் கும்பலைக் கைது செய்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் 6500, 10200, 10500 மற்றும் 10600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் ஒரு உரப் பையில் இருந்த ஆறு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி