ஒக்டோபர் 7 முதல் நேற்று (12)
மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மழை தொடர்பான அனர்த்தங்களினால் 76,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தகவல் புதுப்பிப்பின்படி, 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
38 நலன்புரி நிலையங்களில் 3,560 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 233 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.