சீனன்குடா முறைமுக பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ரயிலிலால் மோதுண்டு தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலால் நேற்று (11) மாலை இருவரும் மோதப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் 47 வயதுடையவர் எனவும், அவரது மகன் 10 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை கொண்டு வந்த உணவுப் பார்ணலை எடுத்துச் சென்ற போது, இவர்கள் ரயிலால் மோதப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனன்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.