ஐக்கிய தேசியக் கட்சியின்

அநுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான டபிள்யூ. பி.ஏகநாயக்க குளியலறையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்கும் போது இவருக்கு வயது 76. அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரது வீட்டின் பணிப் பெண் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுவதனால் அவர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரண விசாரணை அதிகாரி ஜே. எம். ஜயதிலக்க, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி