கண்டி - கொழும்பு வீதியில்
இரண்டு பஸ்கள் மோதியதில்18 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்துவன்கந்த வலகடயாங பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலையில் இருந்து மாவனெல்ல நோக்கி பயணித்த பஸ்ஸும் பாணந்துறையில் இருந்து வந்த பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறையில் இருந்து வந்த பஸ்ஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.