( எஸ்.ஆர்.லெம்பேட்)

மன்னாரில்  சிந்துஜாவுக்கு நீதி கோரி

ஜனநாயகப் போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி   உயிரிழந்த  பட்டதாரியான சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகிறோம்.

எனவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

2b800a3b 320a 40ac a88f 22c59a63348f

 எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராகவும் சிந்துஜாவுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி