குருணாகல் பொது வைத்தியசாலையின்

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குருணாகல் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் அசோக விஜயமானவை 50,000 ரூபா நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இழப்பீட்டுத் தொகையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.
 
குருணாகல் சத்திரசிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாதி மாதவி புத்திகா ராஜகுரு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கி இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி