கொழும்பு - கண்டி வீதியில்

வேவெல்தெனிய பிரதேசத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
 
கெலிஓயா பிரதேசத்தில் வசிப்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
நிட்டபுவவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
வீதி மிகவும் தெளிவாக இருந்த போது சாரதியின் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது தூக்கம் காரணமாகவோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
FB IMG 1723462146899
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி