தனமல்வில பிரதான பாடசாலை

ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் 22 மாணவர்களினால் ஏழு தடவைகள் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தனமல்வில பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இச்சம்பவத்தை பாடசாலை அதிபர், ஒழுக்காற்று குழு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் மூடி மறைத்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் நபர்களை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின்போதே இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி, குறித்த மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரவழைத்து, அவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
 
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி அதே பாடசாலை மாணவர் ஒருவருடன் காதல் உறவு கொண்டிருந்தார். இந்நிலையில் மாணவியை ஏமாற்றி நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த இரு மாணவர்களுடன் சேர்ந்து, மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுவைப் பருக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர் அந்த  மாணவர்கள் இந்த வீடியோவை மாணவியிடம் காட்டியுள்ளனர், 
 
மேலும் அப்பகுதியில் உள்ள மற்றைய இரண்டு  பாடசாலைகளைச்  சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட  20 மாணவர்கள் ஒரு வருடத்தில் ஏழு முறை ் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி