விபத்தில் காயமடைந்த ஒருவரை

வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 1990  அம்பியூலன்ஸுக்குள் வைத்து தாதியை  பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய இராணுவ சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண கந்தானை பல்லாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேக நபரின் சகோதரர் காயமடைந்து அம்பியூலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது இராணுவ சார்ஜன்ட் தாதியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் சுகாதார உதவியாளர் பொலிஸ் காவலரண் பொலிஸ் அதிகாரியிடம் கூறியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, பொலிஸ் குழு ஒன்று அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
 
சந்தேக நபரும் காயமடைந்த அவரது சகோதரரும் அதிகளவில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
 
சந்தேக நபர் பனாகொட இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்தவர்
 
சந்தேக நபர் ஹொரணை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
 
ஹொரணை தலைமையக பொலிஸார் சிந்தக பனாவல தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி