2015 ஆம் ஆண்டு  முதல் 2019

வரையான நல்லாட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய அனைத்துப் பரிந்துரைகளையும் உயர் நீதிமன்றம் நேற்று (09) இரத்துச் செய்துள்ளது.

ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இரத்துச் செய்யக்கோரி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, ஓய்வுபெற்ற  பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியானசந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட மனுதாரர்களுக்கு நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை தனித்தனியாக செலுத்துமாறு விஜித் கே. மலல்கொட, அச்சல வென்னப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஏகமனதாக முடிவெடுத்து அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சிபாரிசுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என அமைச்சரவை தீர்மானித்திருந்த நிலையில், மனுக்களை தொடர வேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் முதற்கட்ட ஆட்சேபனை தெரிவித்திருந்த போதிலும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் ஆட்சேபனையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மனுக்களை விசாரிக்க.

இந்த மனு மீதான விசாரணை கடந்த  மார்ச் 15ஆம் திகதி நிறைவடைந்து நேற்று (09) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி