16 வயதுடைய பாடசாலை

மாணவர் ஒருவர் பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பயாகல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
 
இந்த மாணவன் நேற்று (07) மாலை தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இருப்பினும் இவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதனைப் பார்த்த பயாகல பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸார்  இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களைத் திட்டியுள்ளனர். 
 
இந்நிலையில் மாணவர்கள பயணித்த மோட்டார்  சைக்கிளின் எஞ்ஜின் இயங்கியதால் பயந்துபோன  மாணவன் மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற மாணவனின் காதில் அடித்ததோடு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பாடசாலை மாணவனின் காதில் பல தடவைகள் அறைந்துள்ளனர். 
 
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி