பம்பலப்பிட்டி கோடீஸ்வர

வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரின் மரண தண்டனை இன்று (08) உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 
நீண்டகால விசாரணைகளின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
 
2013 ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி