முஸ்லிம்களின் விசேடமாக

வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் உட்படலான கோரிக்கைகள் அடங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆவணம் இன்று (07) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாசவை சந்தித்து, முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் தேவைப்பாடுகள் தொடர்பான ஆவணத்தைக் கையளித்தார்.
 
குறித்த ஆவணத்தில் உள்ள விடயங்களை ஆராய்ந்த சஜித் பிரேமதாச தனது சாதகமான  நிலைப்பாட்டை தெரிவித்தார்.
 
இதனையடுத்து, நாளை (08) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மகாநாட்டில் எமது கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் என நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி