பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா

தலைநகர் டாக்காவை விட்டு வெளியேறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியிலேயே தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளன.

"இதேவேளை அவரும் அவரது சகோதரியும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு  சென்றுள்ளனர்" என்று தகவல் அறிந்த  அந்த வட்டாரங்கள்AFP செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளன.

"அவர் ஓர்  உரையை நாட்டு மக்களுக்கு ஆற்ற விரும்பினார் ஆனால் அதற்கான வாய்ப்பை அவரால் பெற முடியவில்லை" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் வீதிகளில் பேரணியாகச் சென்று பிரதமரின் மாளிகைக்குள் நுழைந்தனர்.

டாக்காவில் கவச வாகனங்களுடன் படையினரும் பொலிஸாரும்  ஹசீனாவின் அலுவலகத்துக்குச் செல்லும் பாதைகளை முள்வேலிகளால் அடைத்துள்ளனர் என்று AFP செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி