எதிர்வரும் ஜனாதிபதித்

தேர்தலில் பேருவளை இரத்தினக்கல் ஏற்றுமதித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் உட்பட முஸ்லிம் மக்கள் தங்கள் ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட மர்ஜான் பழீல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்து, கட்சியின் மீதான மரியாதையும் அன்பும் மாறாத போதிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தான் தீர்மானித்துள்ளதாக கூறியமை தொடர்பில் தன்னிடம் தெரிவித்ததாகவும  அமைச்சர் குறிப்பிட்டார்.
 
IMG 20240805 021531 800 x 533 pixel
 
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் வெற்றிக்காக உழைத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
 
பேருவளை தொகுதியில் மாணிக்கக்கல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் உள்ளிட்ட வர்த்தக சமூகத்துடன்  இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி