ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

உயர்பீட கூட்டம் இன்று  (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றபோது , லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த நேரத்தில் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இடைவேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிறக்கம் செய்ததமை விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை வெளியேற்றத் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தலைவர் ஹக்கீமின் உடனடி நடவடிக்கையாக,யஹியாகான் உயர்பீடம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில்
பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
 
தலைவர் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி  பாராட்டி , இந்த முடிவை மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை விவரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, தலைவரோடு கைகுலுக்கி , மிகவும் முன்மாதிரியான நற்பண்போடு  யஹியாகான் சிரித்த முகத்துடன் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி