ஒரு பெண்ணிடமிருந்து

ஆணுக்கு பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றால் முறைப்பாடு வழங்க வாய்ப்புள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என அதன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இதன் விளைவாக, ஓர் ஆண் அல்லது சிறுவன் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம்.
 
சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும்போது, ​​பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் சிறிய ஆண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
சிறுவர் மட்டுமின்றி, வயது முதிர்ந்த ஆணும் தனது விருப்பத்துக்கு மாறாக ஒரு பெண்ணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என பொலிஸ் தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி