வர்த்தகர் சுரேந்திர வசந்த

பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைச் சுட்டுக் கொன்று நால்வரை படுகாயமடையச் செய்த துப்பாக்கிதாரிகள்  தப்பிச் சென்ற WPNC1976 பஸ் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவின் நிலைய கட்டளைப் பொறுப்பதிகாரி - 0718596065

அதுருகிரிய பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி - 0718591657

இது தொடர்பில் தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளப் வசந்தவை கொலை செய்ய பாதாள உலக தலைவர் லொகு பெட்டி செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாவில், கொலையின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக இந்த பஸ்ஸை கொள்வனவு செய்ய 14 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம், கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், மிரிஸ்ஸ பொல் அதுமோதர அம்ப கஹவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் ஒரு இலட்சம் முற்பணம் செலுத்தி பஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒன்லைனில் மீதமுள்ள தொகையை ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டுள்றது் இதையடுத்து அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

வசந்த கொலையின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் காரில் ஏறி, வேனில் ஏறி சிறிது தூரம் சென்று கொரத்தோட்டை கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் ஏறி அதிவேகப் பாதை வழியாக கதிர்காமம் பஸ் நிலையம் வரை பயணித்துள்ளனர்.

பாதாள தலைவர் லொகு  பெட்டியின் திட்டப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்லவும் பாதுகாப்புப் படையினரின் கவனத்திலிருந்து தப்பிக் கொள்ளவும் துப்பாக்கிகளை ஏற்றிச் செல்லவும் இந்தப் பஸ் வாங்கப்பட்டதாக இதுவரையான பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி