ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் 75 பேர் நேற்று (29)  ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரியதர்ஷன ஆகியோரும் அடங்குவர்.
 
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி