கடந்த ஆண்டின் முதல் பத்து

மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூடுகளால் நடந்தவை.
 
தங்காலை, நுகேகொட, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 என அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளதாக  அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 7,017 கடுமையான காயங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடம் 2,030 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், கடந்த ஆறு வருடங்களைக் கருத்தில் கொண்டால், கடந்த ஆண்டுதான் அதிகளவான வீடுகள் உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அந்தக் குற்றங்களில் சுமார் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
 
கடந்த ஆறு ஆண்டுகளில் வீடுகளை உடைத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தீர்ப்பதில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த சதவீதம் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
 
இதேவேளை, 2022ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 27சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
 
பெண்களுக்கு  ஏற்படுத்தப்பட்ட கடுமையான காயங்களின் எண்ணிக்கை 154 இல் இருந்து 221 ஆகவும், கத்தி போன்றவற்றால் ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை 74 இல் இருந்து 96 ஆகவும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 21 இல் இருந்து 37 ஆகவும் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
 
கடந்த ஆண்டு, இந்தக் குற்றங்களைத் தீர்ப்பதில் 99 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், குற்றச் செய்திகள் அதிகரித்திருப்பதாகக் கூறும் தணிக்கை அலுவலகம், குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி