சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

கமல் புஷ்பகுமாரவை அந்தப் பதவிக்கு உயர்த்தியமை சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்த உயர. நீதிமன்றம், அவரது தரத்தை பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமிறக்கி உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் துணிச்சலாக செயற்பட்டால் மாத்திரமே விசேட சூழ்நிலையில் பதவி உயர்வு வழங்க முடியும் என பொலிஸ் ஒழுங்குமுறைகளில் தெளிவாக காணப்படுகின்ற போதிலும், கமல் புஷ்பகுமார தனது உயர்கல்வி தகுதி மற்றும் பாராட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
 
கமல் புஷ்பகுமாரவை பொலிஸ் அத்தியட்சகராக பதவி இறக்கம் செய்ய தீர்மானித்த உயர்நீதிமன்றம் 134 பொலிஸ் அத்தியட்சகர்களின் நீதிமன்ற கட்டணத்தை செலுத்துமாறு கமல் புஷ்பகுமாரவுக.கு உத்தரவிட்டுள்ளது.
 
134 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமாரவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு செய்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
 
பொலிஸ் சட்ட விதிகளின்படி, பொலிஸ் அதிகாரி துணிச்சலான செயலைச் செய்திருந்தால் மட்டுமே, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்க முடியும் என்பது தெளிவாகிறது  எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி