கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

உலகெங்கிலும் தொற்றுநோய்களை எதிர்கொண்டு ஆடைகளை வாங்குபவர்கள் புதிய ஓடர்களை வழங்காததால், சுதந்திர வர்த்தக வலய முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளை  இயங்கவைப்பதற்கு  மூலதனம் (பணம்) வழங்குமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 21 ம் தேதி அரசு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில் முதலாளிகள் வெளிப்படுத்தியபடி, மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடியாமல் போகும்.

புதிய ஓடர் பெறாததாலும், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நேரத்தில் முடிக்கப்பட்ட பொருட்களை விற்க முடியாததாலும், மொத்த தொழிலாளர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை செய்ய முடியும் என்று முதலாளிகள் தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தனத்திடம் தெரிவித்தனர்.

இருப்பினும், சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும் முன்னணி தொழிற்சங்கமான பொது சேவைகள் ஊழியர் சங்கம், ஊழியர்களை குறைக்க அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏற்கனவே ஒரு சில சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர் என்று யூனியன் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக தொழிலாளர் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்று தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் கூறுகிறார்.

அதன்படி, இலங்கை முதலாளிகள் கூட்டமைப்பு, ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் மன்றம், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகள் தங்களது திட்டங்களை சமர்ப்பிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.

இலங்கை முதலாளிகள் சம்மேளனம் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ஒப்புக் கொண்டதாக திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு தகவல் பணிப்பாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி