நீர்கொழும்பு பிரதேசத்தில் பாரியளவில்

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 109 கையடக்கத் தொலைபேசிகள், 46 கணனிகள் மற்றும் 3 மடிக்கணினிகள் டஎன்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பாகிஸ்தான், அல்ஜீரியா, நேபாளம், இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந் தெரியாத நபர் ஒருவர் தன்னை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்ததாகவும், சமூக வலைதளமான டிக் டோக்கில் உள்ள வீடியோக்களை லைக் செய்து கமெண்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் அந்த வட்ஸ்அப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின்போதே இவர்கள் கைது செய்யய்ப்பட்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி