கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல

வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும் அதிபர் காரியாலயமும் நாளை  27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

கல்லூரியின் 75ஆவது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீனின் பூரண நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி செயலகமும் அதிபர் காரியாலயமும் புனரமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 
 
எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed Hons) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர் ரஹீம் ஜே.பி. உட்பட கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் திரை நீக்கம் செய்து வைக்க உள்ளார். 
 
இந்த நிகழ்வுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் கல்லூரி மாணவர்களினால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
எஸ்.ஏ.எம். பவாஸ்
உப செயலாளர்
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை
க/ எனசல்கொல்ல ம.க.
0771909968
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி