ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர மையத்தில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

"நாட்டுக்கு வெற்றி - ஒன்றிணைந்து பயணிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் வெல்லவாய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, “புதிய கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான எம்.பி.க்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணி தலைமையிலான ஏனைய கட்சிகள், பாரிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சிவில் அமைப்புக்கள் இப்புதிய கூட்டணியை நோக்கி அணி திரளத் தயாராகி வருகின்றனர்.” என்றார்.
 
இந்த மக்கள் பேரணி நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி