தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ

இலச்சினையைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையான  மக்களை ஏமாற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகேவிடம் நேற்று (24) தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது, ​​குறித்த பணம் சீனாவில் உள்ள "அலி எக்ஸ்பிரஸ்" என்ற நிறுவனத்தின் கணக்கில்  வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  88க்கும் மேற்பட்ட  முறைப்பாடுகள்  கிடைத்துள்ளதுடன் இந்த முறைப்பாடுகளைச் செய்தவர்களில்  டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளும் பெரும் எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இணையம் மூலம் பொருட்களை விநியோகம் செய்வதற்கான தகவல்களை சம்பந்தப்பட்ட விற்பனை நிறுவனங்களுக்கு சமர்ப்பித்த பின்னர்  இந்த ஒழுங்கமைக்கப்பட்ட இந்தக் குழுவினர்,  வாடிக்கையாளர்களின் கைத்தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி  அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் மற்றும் விபரங்களில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து . புதிய படிவத்தை பூர்த்தி செய்ய இணையம் மூலம்  அனுப்புமாறு அவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிநறது.

இதன்படி, இந்த மோசடி தொடர்பான எதிர்கால விசாரணைகளுக்காக வங்கிப் பதிவுகளைப் பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பிக்குமாறு கணினி குற்றப் புலனாய்வுப்  பிரிவு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி