இன்று, நாட்டில் தமக்கு சாதகமான

பக்கங்களுக்கு கட்சி தாவும் கேவலமான அரசியலே நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகாரம் இல்லாத இடத்தில் பணத்தையும், சலுகைகளையும் வரப்பிரசாங்தங்களையும் வழங்கி தம் பக்கம் இழுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பியர் உரிமப் பத்திரம் மற்றும் மதுபான உரிமப் பத்திரங்களை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். பாடசாலைகளில் கணனிக்கு ஏற்ற ஸ்மார்ட் திறைகள் இல்லாவிட்டாலும், இது குறித்து சிந்திக்காமல் மதுபான உரிமப்பத்திரங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, அண்மைக்காலமாக அரசியல் ஆதாயங்களைக் கருத்திற் கொண்டு வழங்கப்பட்ட போலி பியர், மதுபானம் மற்றும் மதுபான சாலை உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்யப்படும். நாட்டின் எதிர்காலம் மதுபான உரிமப் பத்திரங்களை அடிப்படையாக்க் கொண்டமையாமல், பாடசாலை பிள்ளைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகளுடன் கூடிய டேப் மற்றும் ஐபேட்கள் வழங்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுமாயின், அவை முறையான அமைவிட ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்கள், சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை மக்கள் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தப்படும். இதனால் மக்களுக்கு உண்மையை புரிந்து கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 254 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்துறை, அகலவத்தை, வெலிபன்ன ரஹ்மானியா மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

அன்று எமது நாடு சேவைப் பொருளாதாரத்துடன் மட்டுப்படமால், உற்பத்திக் கைத்தொழில் துறையிலும் ஒரு படி முன்னேற வேண்டும் என ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று அந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதன் முக்கியத்துவத்தை இன்று காணமுடிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்த துறையாக மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில முதல்வர்கள் தகவல் தொழிதுட்ப புரட்சியை நடைமுறைப்படுத்தினர். இதன் விளைவாக, அமெரிக்காவின் சிலிக்கன் வெலி இந்தியர்களையே அதிக IT பணியாளர்களாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மாநில அளவில் இளைஞர்களுக்கு திறன்களை உருவாக்கும் மேம்படுத்தும் நிறுவனங்கள் கூட உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது, ​​ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வானிலை மற்றும் காலநிலை அபாயங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் கட்டமைப்புத் தொகுதிகள் உள்ளன. இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும் போது தகவல் தொடர்பு மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகள் இருந்தாலும், எமது நாட்டில் அவ்வாறான கட்டமைப்பொன்று இல்லை. இதற்கு அப்பாலான ஆயத்தங்களும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

களு,கிங் மற்றும் நில்வலா ஈர வலயத்தில் உள்ள நீரை உலர் வலயத்திற்கு திருப்பி விடும் வேலைத்திட்டம் குறித்தும், இந்த வெள்ளத்தால் விலை மதிப்பற்ற நீர்வளம் கடலில் கலப்பது குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்றது. மிகவும் மதிப்புமிக்க வளமான நீர் வளத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது. நஷ்டஈடு வழங்கப்படுகிறதே தவிர, இவற்றைத் தடுப்பதற்கான முன்னாயத்தமோ அல்லது திட்டங்களோ இல்லை. எனவே வெள்ள அபாயத்தை தடுப்பதற்குத் தேசிய வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். இதனை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொள்கை வகுப்பில் ஸ்மார்ட் முறையை மறந்துவிட்டு விருப்பப்படி முடிவெடுப்பதால் ஸ்மார்ட் நாடு குறித்து பேசவே முடியாது. ஸ்மார்ட் நாடு என்று பேசினாலும் ஸ்மார்ட் அரசியல்வாதிகள் இல்லாவிட்டால் இந்த புத்தாக்க திட்டங்களை முன்னெடுக்கவே முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி