காசா போரின்போது 21,000

பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

4,000 குழந்தைகள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
 
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்திய பின்னர் இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
 
அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
 
காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
யுத்தத்தின்போது இழந்த பிள்ளைகளை பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனினும், அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, மோதலில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காசா பகுதியில் அதிகளவான இஸ்ரேலிய குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி