பாறுக் ஷிஹான் 

அம்பாறை மாவட்டம் காரைதீவைச்

சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (20) என்ற மாணவன் இன்று  (14) காலை  லகுகல பிரதேசத்துக்கு உட்பட்ட நீலகிரி ஆற்றில்  நீராடுகையில் மூழ்கி உயிரிழந்தார். 

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சையில் ( 2023 (2024)  சித்தி பெற்று மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகி யிருந்தார்.

இவர் தனது குடும்பத்துடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு இன்று (14) காலை திரும்பும்போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள  நீலகிரி ஆற்றிலே நீராடியபோது மூழ்கி மரணமானார்.

அவரது உடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி