இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகம்

என்பன இவ்வருட இறுதிக்குள் முற்றாக முடக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக் கடமைகளில் சிறந்து விளங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணப்பரிசுகள் மற்றும் பாராட்டுத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்கு தலைமை தாங்கி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட "யுக்திய" நடவடிக்கை நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து 178 ஆவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

138,117 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களில் 703 குற்றவாளிகளும், பட்டியலிடப்பட்ட 91 குற்றக் குழுக்களைச் சேர்ந்த 965 பேரும் யுக்திய மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் இவ்வருட இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பொலிஸ் துறை மீது ஒரு சிலரைத் தவிர நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி