கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை உருவாக்க

முன்மொழியும் தேசிய மக்கள் படையின் தலைவரான அநுரகுமார திஸாநாக்கவிடம்  அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் நிகழ்காலத்தில் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பிலும்  வெளிப்படுத்துவோம் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

 தமிழ் அரசுக் கட்சியுடனான  கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிவாஜிலிங்கத்திடம் வினவியபோதே  சிவாஜிலிங்கம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நேரடியான கருத்தை  வருங்கால ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க  வெளியிடவில்லை என்றும் சிவாஜிலிங்கம்  கூறியுள்ளார்.

“எதிர்காலத்தில் ஆதரவு நிலை என்ன என்று  கூறாமல் கடந்த காலத்தை மறக்கச் சொன்னால் என்ன செய்ய முடியும்? இப்போதும் கூட தேவைப்பட்டால் தனி உறுப்பினர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம். 

மக்கள் விடுதலை  முன்னணி தாக்கல் செய்த வழக்கில், அண்டையிலுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் இணைக்க முடியும் என சரத் என் சில்வா உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளார் 
எனவே இதனை  ஜே.வி.பியை செய்யச் சொல்லுங்கள் என்றும் சிவாஜிலிங்கம்  கூறியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி