மஸ்கெலியா லயன் தொகுதியில் தீ!
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாம் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகலவிற்கு அறிவித்துள்ளது.
மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக்கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16) மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இம்முறை இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகக் கற்கைத்துறையில் தங்கப்பதக்கம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாத்தளை சுதுகங்கை தோட்டத்தைச் சேர்ந்த மு.துலாபரணி.
அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.
தலைமன்னாரில் ரயில் ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.