உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி (திங்கட்கிழமை) ஜப்பான் செல்லவுள்ளார்.

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10 முதல் 13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளன.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி