Feature

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில், நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் போது பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.

மாற்று வழிகள்:

  • எல்லயில் இருந்து வெல்லவாய நோக்கி செல்லும் போது - பண்டாரவளையில் இருந்து அம்பதண்டேகம வழியாக ஊவ கரந்தகொல்ல பகுதி வழியாக வெல்லவாய நோக்கி செல்லலாம்.
  • வெல்லவாயவில் இருந்து எல்ல நோக்கி செல்லும் போது - வெல்லவாய ஊவ கரந்தகொல்ல பகுதியில் இருந்து அம்பதண்டேகம வழியாக எல்ல நோக்கி செல்ல முடியும்.
Feature

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி