அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச
ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தாய்வானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவோஸ் மற்றும் மியன்மார் மீது 40 சதவீதமும், சுவிட்சர்லாந்து மீது 39 சதவீதமும், செர்பியா மற்றும் ஈராக் மீது 35 சதவீதமும், அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரி35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையுமு் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.