கொவிட் 19 வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் பணிபுரியும் 20,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் இப்போது மூடப்பட்டுள்ளன.தொழிலாளர்கள் சம்பளக் குறைப்புகளை எதிர்கொண்டுள்ளனர், சிலருக்கு அரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது அல்லது மற்றவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (எஸ்.எல்.பி.எஃப்.இ) பணிப்பாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் கொவிட் 19 வைரசால் வெளிநாடுகளில் வேலை செய்யும் கிட்டத்தட்ட 30,000 பேர் வேலை இழந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கில் வேலை செய்யும் இலங்கையர்கள் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் உதிவி கேட்டும் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களிலிருந்து எந்த உதவியும் கிடைக்க வில்லை என்று கூறுவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் வேலையை இழந்து வருவதாகவும், அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லை, உணவு இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அல்லது திருப்பி நாட்டிற்கு வரவழைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது.

(lankaviews.com)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி