எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை  (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை  (06) ஆரம்பமாகவுள்ளன.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

மொபைல் சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்திர இணைப்புக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில்  நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி