யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி
கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனக் கப்பல், 2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின் இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.
அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 50 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலையக ரயில் சேவை நாளை (09) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.