எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இன்று சபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது இடையூறு விளைவித்த

ஆளுங்கட்சி எம்.பி சனத் நிஷாந்த உள்ளிட்ட எம்.பிக்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இப்பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 6.00 மணிக்கு வரவு செலவுத்திட்ட 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சிலரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த நாட்களில் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான டிசம்பர் 13ஆம் திகதி, வரவு செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்றைய சபை அமர்வில்  உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடத்தில் இருந்து எழுந்துச் சஜித் பிரேமதாஸவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி